எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவிப்பு.
23, 24, 25ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவிப்பு.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதி குறித்த விவாதம் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் முற்பகல் 10 மணிமுதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினா நேரம் ஒதுக்கப்படாது” – என்றார்.