இராணுவத்திடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள மறுப்போர் இலங்கையர்களாக இருக்கவே முடியாது.
இராணுவத்திடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள மறுப்போர் இலங்கையர்களாக இருக்கவே முடியாது.
இராணுவத் தளபதி கூறுகின்றார்
இலங்கையின் பிரஜைகள் எவரும் இராணுவ மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்வதை மறுக்க மாட்டார்கள் என்றும், அவ்வாறு மறுப்பவர்கள் இலங்கையின் பிரஜைகளாக இருக்க முடியாது என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இராணுவ மருத்துவமனைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது அவர்களது தனிப்பட்ட விடயம். ஆனால், இலங்கை இராணுவம் அனைவரையும் ஒரே சமமாகப் பார்க்கின்றனர்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தலைவர்கள் இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பது கவலை தருகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளோம்” என்றார்.