அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் மைத்திரி!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, 2025 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசியல் கூட்டணியொன்றைக் கட்டியெழுப்பி ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராவதற்கான கலந்துரையாடல்களை அவர் ஆரம்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதை அரசில் அங்கம் வகிக்கும் அவர், அங்கு இருந்துகொண்டே கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றார் என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பாக தனது இல்லத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல் நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.