வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கோரவிபத்து.

திருகோணமலை ,ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியரின் மகள் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை – பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29 வயது) என தெரியவருகிறது.
இந்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.