பாரதீய ஜனதாவை அனுமதிக்காவிட்டால், நாங்கள் இலங்கையை பிரித்து இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்வோம் : சிவாஜிலிங்கம்
இலங்கையில் பாரதிய ஜனதா (பாஜக) கட்சியை உருவாக்க இலங்கை அனுமதிக்கப்படாவிட்டால், இலங்கையை தமிழ் மாநிலமாகவும், ஶ்ரீலங்கா மாநிலமாகவும் பிரித்து வடக்கில் தேர்வாகும் உறுப்பினர்களை டெல்லி பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம் என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் அமைக்கப்பட முடியுமானால் ஏன் இலங்கையில் பாரதீய ஜனதாவை உருவாக்க முடியாது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பூசைக்குரியதானதாக காரணம் காட்டப்படும் கட்சியின் சின்னமான தாமரை மலரை அனுமதிக்க முடியாவிட்டால், சின்னத்தை மாற்றி வழங்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா , அமெரிக்கா போன்ற நாடுகளை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எதிர்க்கக்கூடாது என்று தெரிவித்த அவர் , அது நடந்தால், அந்த நாட்டு இராணுவங்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு வந்து நிலங்களை கையகப்படுத்தும் என்றார் அவர்.
இந்து-லங்கா உடன்படிக்கையின் படி, இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் எந்த நிலத்தையும் யாருக்கும் கொடுக்க முடியாது என்றும், வடக்கில் உள்ள தீவுகள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கு எதிராக மக்களுடன் தொடர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் களம் இறங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார் .