இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் எதிர்வரும் செவ்வாய்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது.
இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது