ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வு இன்று ஜெனீவாவில் தொடங்குகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வு இன்று (22) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வு மார்ச் 23 வரை நடைபெறும்.
இந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவை அமர்வு வரலாற்று பதிவாக இருக்கும்.. கொரோனா வைரஸ் பரவுவதால் இம்முறை அமர்வு ஆன்லைனில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான அறிக்கையை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன 24 ஆம் தேதி இலங்கையின் நிலைப்பாடு குறித்து இணையம் வழியாக மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய இராச்சியம், கனடா, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக கூட்டுத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.