5 லட்சம் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது இந்தியா!

இந்திய தயாரிப்பான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் மேலும் 500,000 அடுத்தவாரம் இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கையை வந்தடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.