1000 ரூபா சம்பளம் கொடுக்க முடியாத கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் என எச்சரிக்கை !
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கின்ற இரண்டு கம்பெனிகளை அரசாங்கமே பொறுப்பேற்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று கடந்த 8 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை தீர்மானித்திருந்தது. இருப்பினும் சம்பளம் வழங்க மறுக்கும் இரண்டு பெருந்தோட்ட கம்பெனிகளின் பிரதிநிதிகளை நாளை (23) செவ்வாய்க்கிழமை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அந்த கம்பெனிகளின் நிதிநிலைமைகள், வருமானம், நட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்து அரசாங்கம் முக்கியத் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.