டிக் டாக் இல் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் படம் வைத்திருந்த நபர் கைது.
டிக் டாக் சமூக வலைத்தளத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களைக் கொண்ட வீடியோவை பதிவேற்றிய 25 வயது நபர் வத்தளையில் வைத்து தீவிரவாத தடுப்பு பொலிஸ் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்தார்
இவர் முல்லைத்தீவில் வசித்துள்ளதுடன், தற்போது ஹட்டனில் வசிப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபரின் தொலைபேசியில் சோதனையிட்டபோது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல படங்கள் , வீடியோக்களை அவர் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் T.I.D யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,
சமூக ஊடகங்களில் இதுபோன்ற படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதைக் கண்காணிக்க தீவிரவாத தடுப்பு பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளை உள்ளடக்கிய ‘சைபர் ரோந்து’ ‘Cyber Patrol’, என்ற சிறப்புப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.