அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் கோட்டா.

அவசர கட்சித் தலைவர்கள்
கூட்டத்தை நடத்தும் கோட்டா.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட அரசியல் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்