அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான விருவிருப்பான இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது நியூசிலாந்து
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 219 ஓட்டங்களை பெற்றது. அந்த அணி சார்பில் அணி தலைவர் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் கப்டில் அதிரடியால் கலக்கினர்.
வில்லியம்சன் அரைசதம் கடந்து 53 ஓட்டங்கள், மார்டின் கப்டில் 50 97 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார். இவரின் அதிரடியான உதவியோடு 219 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துவங்கியது.
இருப்பினும் அவுஸ்திரேலிய அணி இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் 10 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 4 ஓட்டங்களால் தோல்வி கண்டது.
இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.