45 கிலோ போதை பொருளுடன் ராணுவ வீரர் கைது
இன்று (25) காலை இராணுவ வாகனம் போல வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் இருந்து 45 கிலோ 376 கிராம் அளவு கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனம் ஒரு இராணுவ வாகனம் என்பதைக் குறிக்கும் எண்ணைக் கொண்டிருந்ததுடன் , ஓட்டுநர் இராணுவ சீருடையில் இருந்ததாகவும் , அவர் ஒரு இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.
வாகனத்தில் இருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார், அவர் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற ஒருவர் என்பது தெரியவந்தது.
பாணதுறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போலீஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.