கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியாது.
கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி போடப்பட்டதால் அவற்றில் மீற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொவிட் தடுப்பூசிக்கு மது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தடையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமோ அல்லது தடுப்பூசியை தயாரித்த ஆராய்ச்சி நிறுவனங்களோ இதுவரையில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.