தா. பாண்டியன் எனும் செங் கொடி தன் அசைவை நிறுத்திக் கொண்டது …
தா. பாண்டியன் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழக மாநில செயலாளராகவும், மூத்த உறுப்பினராகவும் இவர் இருந்தார். 1989 மற்றும் 1991 தேர்தல்களில் வடக்கு சென்னை தொகுதியில் இருந்து இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டில் அவர் சிபிஐ கட்சியைவிட்டு விலகி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் (யுசிபிஐ) சேர்ந்து மக்களவை எம்.பி ஆக தேர்வானார். அதன்பின் மீண்டும் சிபிஐ கட்சிக்கு திரும்பி அதன் மாநில செயலாளரானார். டி. பாண்டியன் முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார். தா பாண்டியன் 20 பிப்ரவரி 2021 அன்று (வயது 88) சென்னை, தமிழ்நாடு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை.. தா பாண்டியன்
இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்தவர் தா பாண்டியன். இவர் கடந்து வந்த பாதை என்ன?
சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தா பாண்டியன் நேற்று முன் தினம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அவரது உயிர் பிரிந்தது.
88 வயதில் காலமான தா பாண்டியன் அரசியல், இலக்கியம், எழுத்து, பேச்சாற்றல் என்ற பன்முகத் திறமை கொண்ட தா பாண்டியன், கடந்த 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கீழ்வெள்ளமலைப்பட்டியில் பிறந்தார். இவரது முழு பெயர் டேவிட் பாண்டியன்.
கட்சியில் இணைந்தார்
காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் ஆங்கில பிரிவில் பேராசிரியராக இருந்தார். இதையடுத்து அவர் 1953 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஐக்கிய கம்யூனிஸ்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை மாநில செயலாளராக இருந்தார். 1989 ஆம் ஆண்டும் 1991 ஆம் ஆண்டும் வடசென்னை தொகுதியின் எம்பியாக இரு முறை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு அவர் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
இளம் வயது சாதனை
பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது அப்பதவியை முத்தரசன் வகித்து வருகிறார். இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மொழிபெயர்த்தல்
இந்திய ரயில்வே தொழிலாளர் நல சங்கத்தின் தலைவராகவும் பாண்டியன் இருந்தார். பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் புத்தகமாக எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியின் ஆசிரியராகவும் தா பாண்டியன் பணியாற்றியுள்ளார். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
8 மொழிப்பெயர்ப்பு நூல்கள்
இதுவரை 6 நூல்களையும் 8மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். இவரது மனைவி ஜாய்ஸ் பாண்டியன் கடந்த 2010 ஆம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு இரு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் டேவிட் ஜவஹர், சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்தவர், திருச்சியில் பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியிலும் பேராசிரியராக ஜவஹர் பணியாற்றியுள்ளார்.
21 மே 1991 அன்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையான சம்பவத்தின் போது தா.பாண்டியனும் காயமடைந்தார்.