இலங்கையில் 26 நாட்களில் 141 பேர் கொரோனாவால் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸால் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை 451 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 464 பேர் உயிரிழந்துள்ளனர்.