பொலிஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி கோரவிபத்து இருவர் பலி.
பொலிஸ் ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை வாரியபொல கட்டுபொத்த வீதியின் 10 வது மைல் சந்தியில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்த நேரத்தில் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி வயது 48 , மற்றும் அவரது 69 வயது தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்த டிரைவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சாரதி இருவரும் காயங்களுடன் கட்டுபொத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.