கொரோனாச் சாவு 471 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இறுதியாக 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
6 ஆண்களும், ஒரு பெண்ணும் இறுதியாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.