4 இலட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனாத் தடுப்பூசி
இலங்கையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் பெற்று வரை 4 இலட்சத்து 41 ஆயிரத்து 976 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு 5 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்புச் சமரில் முன்களப் பணியாளர்களாகச் செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்குத் தடுப்பூசி கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.
29ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும், 30ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அத்துடன், பெப்ரவரி 4ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6ஆம் திகதி 3 ஆயிரத்து 838 பேருக்கும், 7ஆம் திகதி 1,625 பேருக்கும், 8ஆம் திகதி 5 ஆயிரத்து 989 பேருக்கும், 9ஆம் திகதி 6 ஆயிரத்து 431 பேருக்கும், 10ஆம் திகதி 2 ஆயிரத்து 532 பேருக்கும், 11ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
12ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும், 13ஆம் திகதி 7 ஆயிரத்து 457 பேருக்கும், 14ஆம் திகதி 2 ஆயிரத்து 695 பேருக்கும், 15ஆம் திகதி 3 ஆயிரத்து 589 பேருக்கும், 16ஆம் திகதி 3 ஆயிரத்து 225 பேருக்கும், 17ஆம் திகதி 14 ஆயிரத்து 242 பேருக்கும், 18ஆம் திகதி 23 ஆயிரத்து 67 பேருக்கும், 19ஆம் திகதி 30 ஆயிரத்து 307 பேருக்கும், 20ஆம் திகதி 39 ஆயிரத்து 78 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
21ஆம் திகதி 35 ஆயிரத்து 912 பேருக்கும், 22ஆம் திகதி 15 ஆயிரத்து 583 பேருக்கும், 23ஆம் திகதி 12 ஆயிரத்து 555 பேருக்கும், 24ஆம் திகதி 11 ஆயிரத்து 696 பேருக்கும், 25ஆம் திகதி 14 ஆயிரத்து 866 பேருக்கும், 26ஆம் திகதி 13 ஆயிரத்து 164 பேருக்கும், 27ஆம் திகதி (நேற்று) 35 ஆயிரத்து 343 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.