சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது! தா.பாண்டியன் இழப்பு பற்றி மனோ கணேசன்.
சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.
விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.
இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.
இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.
சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா.பாண்டியன் திகழ்ந்தார்.
அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்.