புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட தொடங்கின.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இன்று (01) முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட தொடங்கியுள்ளன. எனினும் இ.போ.ச. பஸ்கள் வழமைபோன்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்தே நெடுந்தூர பேருந்து சேவை இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையூடாக நெடுந்தூர பஸ்கள் செல்ல கூடாதெனவும் முனிஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்ட புதிய நெடுந்தூர பஸ் நிலையத்துக்கு செல்லவேண்டும் என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த மாதம் அறிவித்திருந்தார். எனினும் புதிய பஸ் நிலையத்துக்கு போக்குவரத்து சபை பேருந்துகளும் வந்தாலே தாம் பஸ் சேவையை நடத்துவோம் என தனியார் பேருந்து சாரதிகள் அங்கு செல்ல இழுபறி நிலவியது.

எனினும் இன்று முதல் நெடுந்தூர பஸ்நிலையத்தினை தவிர்த்து மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் காலை நெடுந்தூர சேவையில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் சட்ட வடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்ததுடன் மத்திய பேருந்து நிலையத்திற்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்று இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு குறித்த விடயத்தினை தெளிவுபடுத்தி, இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தான் வெளி மாவட்டத்திற்கான சேவைகள் இடம்பெறும் எனவும், குறிப்பாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ் நடத்துனர் சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

எனினும் முதல்வர்,பொலிஸ் அதிகாரியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது இ.போ.ச. நெடுந்தூர பேருந்துகள் புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடவில்லை. வழமைபோன்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்தே சேவை இடம்பெறுகிறது.

எனவே முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனியார் பஸ் சேவையில் ஈடுபடுவோர் கோரிக்கை விடுக்கின்றனர். யாழ் மாநகர முதல்வர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் பல்வேறுபட்ட கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளை அழைத்த போதும், அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும், தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.