பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு சிறைத்தண்டனை
ஊழல் குற்றச்சாட்டில் பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு பிரெஞ்சு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஓராண்டு வீட்டு காவல் தண்டனையாக வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் மூத்த நிதிபதியிடம் இருந்து தகவல்களைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்த தண்டனை ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு, அவரை வீட்டுக் காவலில் (House Arrest) வைக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட மாட்டார், சார்க்கோசி தனது வீட்டில் அதிகாரிகளின் மேற்பார்வையில் மின்னணு அணிகலன் அணிய வேண்டியிருக்கும்.
66 வயதான சார்க்கோசி 2007 முதல் 2012 வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்தார்.
நவீன பிரெஞ்சு வரலாற்றில் முதல்முறையாக, ஜனாதிபதி சார்க்கோசி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சார்க்கோசியுடன், அவரது இணை பிரதிவாதிகள் மற்றும் வழக்கறிஞர்களான தியரி ஹெர்சாக் மற்றும் முன்னாள் மாஜிஸ்திரேட் கில்பர்ட் ஆசிபர்ட் ஆகியோருக்கும் இரண்டு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகள் இடை நிறுத்தப்பட்ட வீட்டு காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.