கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பலி.

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பொதுச்சந்தை பின்புர வீதியில் அமைந்துள்ள குறித்த அரிசி ஆலையில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த குடும்பஸ்தர் நெல் பதப்படுத்தும்
தொட்டிபொருத்து வேலை முடித்து கீழே இறங்க முயற்சித்த போதே தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்ததை அவதானித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனவும் இராமையா விஜயரத்தினம் 54 வயதுடையவரும் ஆவார். குறித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது,
மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.