கொலையாளியான போலீஸ் அதிகாரி மனைவிக்கு எழுதிய மடல் …
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏ.எம்.பிரேமசிரி கடைசியாக மனைவிக்கு எழுதிய மடல் …
அம்மாவுக்கு …
என்னை மன்னித்துவிடுங்கள், என் வாழ்க்கையே என் குடும்பம்தான். நான் என்ன செய்தாலும், அதை என் குடும்பத்தினருக்குக் கொடுத்தேன். அது நடந்து கொண்டிருக்கும்போது, என் நண்பர் ஒருவரது மகளொருவர் எஸ்.ஐ. மாமா, எஸ்.ஐ. மாமா என்று அழைத்து என்னிடம் நெருக்கமானார்.
நான் என் குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறேன் என அவருக்குத் தெரியும். முதலில் பெரிதாக இல்லாவிடினும் , அவரையும் எனது குழந்தைகளைப் போலவே நடத்தும்படி என்னிடம் வேண்டிக் கொண்டார். என்னால் அதை செய்ய முடியாது. நான் அவர் கேட்ட அனைத்தையும் செய்தேன்.
பின்னர் அவர் உங்களையும் குழந்தைகளையும் சபிக்கத் தொடங்கினார். எனக்கு அவர் மேல் அதுவே சலிப்பாக மாறியது. இனி நம் நட்பை நிறுத்திக் கொள்வோம் என்றேன். முடியாது என்று சொல்லி பல விஷயங்களைச் செய்தார்.
அது உங்களுக்கு தெரியும்.
உங்கள் கோபம் ஒரு பெண்ணாக நியாயமானது. ஆனால் இப்போது நான் சட்டத்தின் முன் ஒரு குற்றவாளி. யாருக்கும் தெரியாத இடம் ஒன்றுக்கு சென்று இதைச் செய்திருக்கலாம். அப்படியானால், என்னைக் கண்டுபிடிக்கும் வரை காவல்துறை உங்களை சித்திரவதை செய்யும். எனவே நான் அதை போலீசாருக்குத் தெரியும் விதத்தில் செய்து கொள்கிறேன்.(மாய்த்துக் ககொள்கிறேன்).
அப்போது அவர்கள் உங்களை துன்புறுத்த மாட்டார்கள். இது ஒரு அவமானமாக இருக்கும். பொறுமையாக இருங்கள். நீங்கள் ஒரு வலிமையான பெண் என எனக்குத் தெரியும்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உலகத்தை அறியாமல் நான் இதில் ஈடுபடவில்லை. ஆனால் இப்போது எதுவும் மிச்சமில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் உணரும் அதே வலியை என் வாழ்க்கையில் நானும் உணர்கிறேன். இது என்னுடைய தவறு. நான் இல்லாமல் போனாலும், உங்களை கவனித்துக் கொள்ள யாராவது இருப்பார்கள். நான் பல ஆண்டுகள் சிறையில் அடைபட வேண்டி வரும். இது திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. நிச்சயமாக, அப்படி நடக்காமல் இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். எனது மூன்று குழந்தைகளுடன் சந்தோசமாக இருங்கள். சிறிது காலத்தில் இந்த துயரம் அனைத்தும் மறைந்து போய்விடும்.
உலகத்தில் பிறப்பும், இருப்பும், இல்லாமல் போவதும் இருந்து கொண்டே இருக்கும். இதுவே உலகின் கோட்பாடு.
ஏற்கனவே சி.ஐ.டியினர் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். போலீசார் வந்தால், உண்மையான சூழ்நிலையைச் சொல்லுங்கள்.
நீண்ட காலமாக என்ன நடந்தது .. அன்பு என்று சொல்லி சொல்லி நான் வெறுத்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். அனைத்து கடவுளர்களின் ஆசிகள்.
நீண்டதொரு தொலைவுக்கு செல்கிறேன். புத்தரின் ஆசீர்வாதங்கள் . கதிர்காமக் கடவுளின் (முருகப் பெருமானின்) ஆசீர்வாதங்கள்.
உங்கள் வாழ்வில் எத்தனை அவமானங்கள் வந்தாலும், ஒரு மலையை போல உங்கள் குழந்தைகளுடன் பொறுமையாக இருங்கள்.
என் தாயின் மூன்று மாத சடங்கைச் செய்ய என்னால் வர முடியாது.
பிரேமே (ஏ.எம்.பிரேமசிரி)