பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல கட்டங்களின் கீழ் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
பிரதமருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.