நீதி கோரும் கறுப்பு ஞாயிறு தினம் போராட்டத்துக்கு ஜே.வி.பி. ஆதரவு.
நீதி கோரும் கறுப்பு ஞாயிறு தினம்
போராட்டத்துக்கு ஜே.வி.பி. ஆதரவு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கறுப்பு ஞாயிறு தினப் போராட்டத்துக்கு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளை வெளிப்படுத்தவும், தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவும் அரசையும் சட்ட அமுலாக்க அதிகாரிகளையும் கேட்டுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி கிறிஸ்தவ மக்களால் கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது எனக்கூறி கறுப்பு ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்க ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் தெரிவிப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பூஜைக்கு வருகைதரும் அனைவரையும் கறுப்பு நிறத்திலான ஆடை அணிந்து வருமாறு மறைமாவட்டத்தின் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.