பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு வீடு அன்பளிப்பு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.