வெறிச்சோடிய நிலையில் கொடிகாம பொதுச்சந்தை.
கடந்த 1ம் திகதி PCR பலிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படும் போது போதிய ஒத்துழைப்பு வழங்காமையினால் 80% மானோருக்கு பரிசோதனை மாதிரிகள் பெற்றுக் கொள்ள முடியவில்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
முதற் கட்டம் சிலரிடம் பெற்ற PCR மாதிரிகளில் மரக்கறி வியாபாரி ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சந்தை வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு நேற்றில் இருந்து மீள வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் PCR பரிசோதனைக்கு உட்ப்பட்டவர்கள் மாத்திரமே வியாபார நடவடிக்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனைக்கு உட்ப்படாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை, இதனால் பரிசோதனைக்குள்ளான ஆறு வரையான வியாபாரிகளே வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா பயப்பீதியில் நுகர்வோரும் ஒரு சிலரே வந்து சென்றனர். இதனால் வெறிச்சோடியது சந்தை.
நேற்று மீள PCR மாதிரிகள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதில் 200 பேருக்கான PCR மாதிரிகள் பெறப்பட்டுள்ளது, அதற்கான விடைக்காக காத்திருப்பு.
பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் வேண்டாம், PCR க்கு பயம் வேண்டாம், முன்வருவோம் தொற்றில் இருந்து அனைவரையும் காப்போம்!