மூன்றாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்.

மூன்றாவது நாளாகவும் தொடரும்
இரணைதீவு மக்களின் போராட்டம்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இரணைதீவுப் பகுதியில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 3ஆம் திகதி இரணை மாதா நகர் பகுதி மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
எனினும், தொடர்சியாக இரணைதீவுப் பகுதியில் சடலங்களைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பினருக்கும் இரணைதீவு மக்களால் எதிர்ப்பு மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.