இதுவரை 9 சடலங்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்
கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் இன்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றினால் மரணமாவோரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் சென்ற வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் முதலாவது சடலம் நல்லடக்கத்திற்காக அடக்கத்திற்கான இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி மஜ்பா புரத்திற்கு இன்று மாலை எடுத்துச்செல்லப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாசா கொவிட் தொற்றினால் மரணமடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாசாத் தொழுகை நடாத்தப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தற்போது மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.