இன்று அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி.

இன்று அதிகாலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மயிலம்பாவெளி விபுலானந்த புரம் பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரத்திலே இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை இறந்தவரின் உடல் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.