அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் பலி. மூவர் படுகாயம்.

இன்று அதிகாலை வெள்ளவத்தை பகுதியில் நடந்த வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 5.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மோட்டார் வாகனமொன்று வெள்ளவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதித் தள்ளி வேகமாக தப்பிச் சென்ற போது மேலும் 3 பேர் மோட்டார் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்தியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இரவு விடுதியொன்றில் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.