நாயாற்றுக் கடல் நீர் ஏரியில் மூழ்கி ஒருவர் பரிதாபச் சாவு.

முல்லைத்தீவு, நாயாற்றுக் கடல் நீர் ஏரியில் இன்று காலை குளிக்கச் சென்றவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நால்வர் குளித்துக்கொண்டு இருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் மூவர் கரை ஏறியுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
காணாமல்போனவரைத் தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்டபோது கடலில் இருந்து காணாமல்போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்