சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
கண்டி பொலிஸ் மகளிர் பிரிவும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
கண்டி பொலிஸ் மகளிர் பிரிவும் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு கண்டி பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் மத்திய மாகாண பொலிஸ் மகளிர் அணித் தலைவியும் உதவிப் பொலிஸ் அதிகாரியுமான ஜானகி குமாரி செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகர் சி. ஏ. ரட்நாயக மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பெ முத்துலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகள், பெண் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விசேடமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், கண்டியிலுள்ள தெற்கு மற்றும் வடக்கு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்களக்கு பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்டிகர், பெனர்கள் முதலியவை வழங்கி வைக்கப்பட்டன.
இக்பால் அலி.