‘அம்மாவருனே’ (அன்னையரே) பொழுதுபோக்கு நிகழ்ச்சித்திட்டம் கௌரவ பிரதமரின் தலைமையில் நடைபெற்றது!
நல்லொழுக்கமுள்ள சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கு நல்ல பெற்றோரை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘அம்மாவருனே’ (‘தாய்மார்களே’) பொழுதுபோக்கு நிகழ்ச்சித்திட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.03.08) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வனிதா வாசனா’ வங்கி அட்டையும் இந்நிகழ்வின்போது கௌரவ பிரமரின் தலைமையில் வெளியிடப்பட்டது.
இதன்போது ‘வனிதா வாசனா’ வங்கி அட்டை கௌரவ பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களினால் இதன்போது பாடசாலைகளுக்கு கிருமிநாசினிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
நாராஹேன்பிட அபயராமாதிபதி மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முருத்தேட்டுவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமரின் பாரியார திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி குமாரி ஜயசேகர மற்றும் பெற்றோர், பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.