யாழ்ப்பாணம் மக்கள் வங்கி கிளை உதவிமுகாமையாளர் வீதி விபத்தில் பலி.
யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மின்தடைப்பட்டிருந்த வேளையில் விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.