இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு! – 10 நாட்களில் 45 பேர் பரிதாபச் சாவு
கொரோனா நிலைமையால் இலங்கை முடங்கியிருந்தபோது வாகன விபத்துக்களும் குறைவடைந்திருந்தன. ஆனால், நாடு திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களில் இளைஞர்களே அதிகமாகவுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.