பிரித்வி ஷா 123 பந்தில் 185 ரன்கள் விளாசி சாதனை.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சுவராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது. சிராக் ஜானி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் சவுராஷ்டிரா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பிரித்வி ஷா 29 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 67 பந்தில் சதம் விளாசினார். ஜெய்ஸ்வால் 104 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.
பிரித்வி ஷா 123 பந்தில் 185 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா ஏற்கனவே புதுச்சேரிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து உலக சாதனைப்படைத்திருந்தார். டெல்லிக்கு எதிராக 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா தொடரின்போது மோசமாக விளையாடியதால் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது உள்ளூர் போட்டியில் அசத்தி வருகிறார்.