டாக்டர் படம் வெளியாகும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களால் மாலை, இரவு காட்சிகளுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து வசூல் பாதிக்கும் என்றும், சுவரொட்டிகள் ஒட்டி படங்களுக்கு விளம்பரம் செய்வது கஷ்டம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பதாக பட நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தையும் இயக்க உள்ளார்.
டாக்டர் படம் வருகிற 26-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தேர்தல் காரணமாக வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர். டாக்டர் படம் வெளியாகும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.