கோட்டா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை :அனுர திசாநாயக்க

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ , அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என மொட்டு கட்சி தலைவர்களுக்கு தெரிவித்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளர் ஒருவரைக் கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார், என்றார்.
அதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் பசில் ராஜபக்ஷ என்று திரு.திசாநாயக்க
ஜனதா விமுக்தி பெரமுனா ஏற்பாடு செய்த பேரணியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.