கையிலிருக்கும் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தைப் பெற என்ன செய்யலாம்.
நிறைய பெண்களுக்கு முகம் இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். கைகளும் கால்களும் அதிகப்படியான சுருக்கம் விழுந்து, கருநிறம் படிந்து பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை கொடுக்காது. காரணம் பெண்கள் செய்யும் வேலை தான். பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்வதன் மூலம், அவர்களுடைய கைகள் வறட்சி தன்மை அடைந்து, சுருக்கம் விழுந்து காணப்படும். கையிலிருக்கும் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தைப் பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கைக்கு மட்டுமல்ல, கால்களுக்கும் இதே குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுடைய கைகள் வெயிலில் அதிகமாக பட்டு சன் டேன் மூலம், கருநிறம் நிறைந்து இருந்தால் கூட, அது படிப்படியாக குறைவதற்கு இந்த ரெமிடி ரொம்பவும் உபயோகமானதாக இருக்கும். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காப்பி தூள் – 1 ஸ்பூன், அரிசி மாவு – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், தயிர் – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து உங்களது கைகளின் மேல் பக்கத்தில் முழுவதுமாக தடவி ஸ்கரப் செய்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்பு இந்த பேக்கை 20 நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரை ஊற்றி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து கைகளை கழுவி விடுங்கள். உங்களுடைய கை இந்த பேக்கை போடுவதற்கு முன்பு இருந்ததற்கும், இந்த பேக்கை போட்ட பின்பு இருப்பதற்கும் நன்றாகவே வித்தியாசம் தெரியும். வாரத்தில் ஒருநாள் இதை செய்து வாருங்கள்.
இதோடு சேர்த்து இரண்டாவதாக உங்களுடைய கையை மென்மையாக வைத்துக் கொள்ள, தினம்தோறும் என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன், கிளிசரின் – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் பாத்திரம் தேய்த்த பின்பாக இருந்தாலும் சரி, துணி துவைத்த பின்பாக இருந்தாலும் சரி, உங்களது கைகளை சோப்பு போட்டு முதலில் நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு 1/2 ஸ்பூன் அளவு இந்த கலவையை உங்களுடைய உள்ளங்கைகளில் போட்டு தடவி, கைகளுக்கு மேல் பக்கம் உள் பக்கம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். தினமும் இதைச் செய்துவந்தால் செயற்கையான சோப்பு, உங்களுடைய கைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சுருக்கம் ஏற்படாது. கையில் இருக்கும் தோல் ட்ரையாக மாறாது. கைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதோடு சேர்த்து நகங்களில் பிரச்சனை வராமல் இருக்க, வாரம் ஒரு முறை இயற்கையாகக் கிடைக்கும் மருதாணி இலைகளை பறித்து அரைத்து நகங்களில் வைத்துக் கொள்வது மிக மிக நல்லது. முகம் மட்டும் பெண்களுக்கு பார்ப்பதற்கு அழகாக இருந்தால் போதுமா? கைகளும் கால்களும் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.