வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோரை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு நாட்டிற்கு வரும் இலங்கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளரின் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
கோவிட் வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி பெற்று வரும் நபர்களை PCR பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் விடுவிப்பதற்காக சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிடம் உடனடியாக கலந்துரையாடல் மேற்கொண்டு இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என சுகாதார பணிப்பாளர் தன்னிடம் கூறியதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.