இவ்வருடம் நடுப்பகுதியில் மேற்கு முனையம் வேலைத்திட்டம் ஆரம்பம்! தயா ரத்நாயக்க.
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“மேற்கு முனையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயற்படுமாறு எமக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுகள் இடம்பெறுகின்றன.
சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எமது யோசனை அரசிடம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் சர்வதேச உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, மேற்கு முனையம் கட்டியெழுப்படும். 85 வீதம் முதலிடும் நிறுவனம் வசமும், 15 வீதம் துறைமுக அபிவிருத்தி அதிகார சபை வசமும் இருக்கும். இவ்வருடம் நடுப்பகுதியில் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்” – என்றார்.