சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையில் மக்கள் இன்று பார்வையிட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) International Space Station இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்வையிடக்கூடியதாக இருந்தது.
சற்று முன் 7.05 மணிக்கு ஆரம்பமாகி 7.12 மணிவரை சில நிமிடங்கள் தென்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருள் என்பதுடன் இதில் தற்போது 4 அமெரிக்கா, 2 ரஷ்யா, 1 ஜப்பான் என 7 விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் பயணிக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணம் செய்கிறது.