அரசுக்குள் எதிர்க்கட்சி!’மொட்டு’வின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.
அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைத்துவம் குறித்தும், அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அரசில் இணைத்துக்கொண்டு பயணிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர் எனவும், இதனால் அரசில் பாரிய குழப்பங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அரசில் ஒரு சில தலைவர்கள் தொடர்பில் விமர்சனக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.