தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்.

மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது.
இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.