60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெற ஒன்லைன் நேர ஒதுக்கீடு
கொழும்பில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் COVID-19 தடுப்பூசி பெறுவதற்கு, வசதியான திகதி மற்றும் நேரத்தை இலவசமாக முன்பதிவு செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையினால் இப்புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநகர சபை ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு 01-15 இல் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், www.colombo.mc.gov.lk. ஊடாக அல்லது eChannelling.com தளத்தில் நேரடியாகச் சென்று தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம், கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு 01-15 இற்கு வெளியில் வசிக்கின்ற மற்றும் 60 வயதுக்கு குறைந்தவர்களுக்கு, இம்முறை மூலம் நேரத்தை ஒதுக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.