ராஜபக்ச அரசை விரட்டியடிப்போம் பொன்சேகா சூளுரை; முரளியையும் வறுத்தெடுப்பு.
“முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக விளையாடியபோது அவரது பந்து வீச்சைப் பார்த்து மகிழ்ந்தோம்; பாராட்டினோம். ஆனால், இன்று ராஜபக்சக்களுக்கு சோரம்போகும் விதத்தில் அவர் பந்து வீசுகின்றார். முரளிக்கு 2 ஏக்கர் காணியை அரசு வழங்கியுள்ளது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா, முரளி மீது விமர்சனக்கணைகளைத் தொடுத்தார்.
அத்துடன் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம். எமது பக்கம் பலமானதொரு அணி இருக்கின்றது. 2025ஆம் ஆண்டளவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமையும் எனவும் சரத் பொன்சேகா சூளுரைத்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மீதும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.