இலங்கைக்கு பிரிட்டன் நம்பிக்கைத் துரோகம் செய்கிறது! – தினேஷ்
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான புதிய பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது நட்புறவற்ற செயலாகும். இது நம்பிக்கைத் துரோகமாகும்.”
– இவ்வாறு சாடினார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன.
ஐ.நா. மனித உரிமைகள் சபைகளில் இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களிடம் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும்.
இவ்வாறானதொரு பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது, ஒரு பொதுநலவாய உறுப்பினரான இலங்கை மீது பிரிட்டனின் நட்புறவற்ற செயலாகும்.
இது பிரிட்டன், இலங்கைக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும்.
இலங்கையைத் திட்டமிட்ட வகையில் பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் பழிவாங்குகின்றன” – என்றார்.