சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்.

சுவர்ணமஹல் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
சுவர்ணமஹல் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நேற்று (16) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.